பிரபல நடிகர்
விஜய் தேவரகொண்டா AI மூலம் தனது அடையாளம் தவறாக பயன்படுத்தப்படுவதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அனுமதி இன்றி தனது புகைப்படத்தை பயன்படுத்தி டி-ஷர்ட், கப் போன்ற பொருட்களை விற்பனை செய்து வருவதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. AI தொழில்நுட்பம் மூலம் பிரபலங்களின் தனிப்பட்ட உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக பிரபலங்கள் சட்ட போராட்டத்தில் இறங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.