AI மாணவர்களை வேகமாக முட்டாளாக்கும் - Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு

7பார்த்தது
AI மாணவர்களை வேகமாக முட்டாளாக்கும் - Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு
பள்ளி, கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவை (AI) மிக வேகமாக அறிமுகப்படுத்துவது மாணவர்களின் சுயசிந்திக்கும் திறனை குறைத்து, அவர்களை முட்டாளாக்கும் அபாயம் உள்ளதாக ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எச்சரித்துள்ளார். பதில்களை தேட AI-ஐ மட்டுமே நம்பியிருந்தால், மாணவர்கள் முயன்று கற்கும் பழக்கத்தை இழந்துவிடுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, கல்வித்துறையில் AI தொழில்நுட்பத்தை சரியான கட்டுப்பாடுகளுடன் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அவரது கருத்து தற்போது விவாத பொருளாகியுள்ளது.