125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 13ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவரது அறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு, 13ஆம் தேதி காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மத்திய அரசின் புதிய 125 நாள் வேலைத் திட்டத்துக்கு எதிராக திமுக செயல்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.