தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியின் 2வது கட்ட பிரசார கூட்டம் நாளை (மார்.1) புதுச்சேரி மற்றும் மதுரையில் நடைபெறுகிறது. மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்கிடையில், இன்று இரவு அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.