அதிமுகவின் அழுத்தம் காரணமாகவே மகளிர் உரிமை தொகை வழங்கப்படுவதாக அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "விடியல் பயணம், புதுமைப்பெண் போன்ற திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல திமுகவின் மகளிர் படை களமிறங்கிவிட்டது, அவர்களின் வேகமான எஞ்சின் முன் உங்களது 'டப்பா எஞ்சின்' ஒருபோதும் தாக்குப்பிடிக்காது" என விமர்சித்து உள்ளார்.