தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (பிப்.4) சென்னையில் தொடங்கியது. ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் தேர்தல் பரப்புரைக்கான வியூகங்கள் மற்றும் பூத் கமிட்டி பணிகளை முடுக்கிவிடுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.