சென்னையில் நாளை (மே 19) காலை 9 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக எம்எல்ஏக்களில் 25 பேர் தவெகவை ஆதரித்துச் செயல்பட்ட நிலையில், இபிஎஸ் தலைமையில் 22 பேர் அதற்கு எதிராக வாக்களித்திருந்த சூழலில், கட்சியின் அடுத்தகட்ட
அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிக்க இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
நன்றி: நியூஸ் தமிழ்