அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (பிப்.4) காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்க இருக்கிறது. இக்கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு, கூட்டணி நிலைப்பாடு மற்றும் பூத் கமிட்டி பணிகளை முடுக்கிவிடுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டும் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்து, தற்போதைய ஆளுங்கட்சிக்கு எதிராக தீவிரப் பிரச்சார உத்திகளை வகுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.