அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று (பிப்.4) நடைபெறுகிறது. இதில், திமுகவின் 5 ஆண்டு ஆட்சியில் மக்கள் செலுத்திய வரி மற்றும் கட்டணங்களை அதிமுக ஆட்சியுடன் ஒப்பிட்டு டிஜிட்டல் பிரசாரத்தை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆலோசனைகளை பழனிசாமி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.