கோவை அருகே நடந்த பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, அதிமுக நிர்வாகி கவிசரவணக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 28ம் தேதி, கவிசரவணக்குமாரின் மனைவி மகேஸ்வரியை கார் டிரைவர் சுரேஷ் கொலை செய்தார். விசாரணையில், விவாகரத்து தர மறுத்த மனைவியை கொலை செய்யுமாறு கவிசரவணக்குமார், சுரேஷை தூண்டியதும், அதற்காக செங்கல் சூளையை எழுதி தருவதாகவும் ஆசை வார்த்தை காட்டியதும் அம்பலமானது. இதையடுத்து, கவிசரவணக்குமார் கைதுசெய்யப்பட்டார்.