விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பாதமுத்து-பூண்டி மாதா தம்பதிக்கு குழந்தை தத்தெடுத்து தருவதாக சேலம் அதிமுக மாணவர் அணி துணை செயலாளர் அருண்குமார் வரவழைத்துள்ளார். தனது தாய்மாமா வெற்றிவேலை போலி இன்ஸ்பெக்டராக நடிக்க வைத்து தம்பதியிடம் ரூ.3 லட்சத்தை பறித்துள்ளார். புகாரின் பேரில் அருண்குமார், வெற்றிவேல், பழனிபாரதி, மதுராஜ், ஏசுராஜ் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் அருண்குமாரை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.