அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், மருது அழகு ராஜா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் திமுகவில் இணைந்தனர். இவர்களை தொடர்ந்து, வைத்தியலிங்கத்தையும் திமுகவில் சேர்ப்பதற்கான முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர்கள் திமுகவில் இணைந்தது ஸ்டாலினுக்கு மேலும் பலத்தை கூட்டினாலும், திமுக அமைச்சர்களுக்கு பெரிய சவாலாகவே அமைந்துள்ளது. அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர்கள் முக்கிய அமைச்சர்கள் என்பதால், இவர்களுக்கு சீட் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.