அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் டிச., 10ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு கூடுகிறது. இதற்காக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக பொதுக்குழு கூடுவதால், எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.