சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாள் இன்று (பிப்.20) நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளிக்கிறார். இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் பதிலுரையை அதிமுக புறக்கணித்துள்ளது. நேற்றைய தினம், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேரவையில் அதிமுக கேள்வி எழுப்பியது. ஆனால், அப்போது முதலமைச்சர் பேரவையில் இல்லாததால், அமைச்சர்கள் பதிலளித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கவே இந்த புறக்கணிப்பு என கூறப்படுகிறது.