சிவகங்கை மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகியான பொன்மணி கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் இன்று அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிப்பதாக ஈபிஎஸ் வாக்குறுதி அளித்துத் தன்னை ஏமாற்றிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தென் மாவட்ட அதிமுகவை குறிவைத்துத் தவெக காய் நகர்த்தி வருகிறது.