அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் இன்று (பிப்.8) நடந்த ஜாக்டோ ஜியோவின் நன்றி அறிவிப்பு மாநாட்டில் பேசிய முதலமைச்சர், “தமிழக மக்களின் எண்ணங்களுக்கு எதிராக கூட்டணி அமைந்துள்ள அதிமுக, எப்படி அரசு ஊழியர்களின் நலனில் கவனம் செலுத்தும்?. வியர்வைத்துளி சிந்திய அரசு ஊழியர்களின் கண்களில் ரத்த கண்ணீர் வரவழைத்த கட்சி அதிமுக” என்றார்.