சென்னை அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் இன்று (ஜூலை 9) கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை ஓசூர் முன்னாள் எம்எல்ஏ பாலகிருஷ்ணா ரெட்டி புறக்கணித்ததால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்ட செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த அவர், உள்கட்சி மோதல் காரணமாகவே இக்கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.