தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்., 17) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதிமுக உறுப்பினர்கள் 'காதுகுத்து விழா' அழைப்பிதழுடன் பேரவைக்கு வருகை தந்து கவனத்தை ஈர்த்தனர். இந்த அழைப்பிதழில், "கடந்த நான்கரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. தலைமை தாங்குபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று காது குத்துவார்" என்று கிண்டலாக விமர்சித்துள்ளது.