சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், பெரும்பான்மை இன்றி தவிக்கும் தவெக-விற்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்குப் பிறகு, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் மறு உத்தரவு வரும் வரை சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும் என கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நிலவும்
அரசியல் சூழலில் குதிரை பேரத்தைத் தவிர்க்க இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி: நியூஸ் 18