அதிமுகவைச் சேர்ந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து அவர்கள் தவெகவில் இணைந்துகொண்டனர். இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை வெளியிட்ட பதிவில், “3 பேர் தவெகவில் இணைந்த நிலையில் நடந்திருப்பது 100 சதவீதம் குதிரை பேரம் தான். ராஜினாமாவை ஏற்கும் முன்னரே 3 பேரும் அவசர அவசரமாக தவெகவில் இணைந்துள்ளனர்” என குற்றம்சாட்டியுள்ளார்.