அதிமுக எம்.பி. பதவி காலியானதால் தவெகவிற்கு ஒரு மாநிலங்களவை சீட்

11849பார்த்தது
அதிமுக எம்.பி. பதவி காலியானதால் தவெகவிற்கு ஒரு மாநிலங்களவை சீட்
அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அவர் வகித்து வந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு இடத்திற்கு மாநிலங்களவை எம்.பி.யை நியமனம் செய்ய விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனால் தமிழக சட்டசபையில் பெரும்பான்மையான எம்எல்ஏக்களை கொண்ட தவெகவுக்கு அந்த ஒரு உறுப்பினர் பதவி கிடைக்கும். சட்டசபை தேர்தலில் வென்ற கையோடு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியையும் தவெக கைப்பற்ற உள்ளது.

தொடர்புடைய செய்தி