அதிமுகவிடம் 15 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் கேட்டதாகவும், ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர் என்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கோவையில் இன்று (மார்ச் 26) செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் ஜெயலலிதா இருந்தபோது இருந்த அணுகுமுறை இப்போது இல்லை. அதிமுக அணியில் இடம்பெற முயற்சித்தோம். தேவேந்திர குல மக்களை அதிமுக அவமரியாதை செய்துவிட்டது. தனித்து போட்டியிடும் சூழல் உருவாகிவிட்டது என கூறியுள்ளார்.