அதிமுக இரு அணிகளாக உடைந்துள்ள நிலையில், அதிமுகவில் நிர்வாகிகளின்
பதவி பறிப்பு நடவடிக்கை தொடர்கிறது. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பின் 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்துள்ளதால், இருதரப்பு மோதல் முற்றி வருகிறது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, தளவாய் சுந்தரம், ராஜன் செல்லப்பா, கோகுல இந்திரா, வளர்மதி, பொன்னையன் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.