தவெக உடனான கூட்டணிக்கு இனி வாய்ப்பு இல்லை என்று தெரிந்துவிட்டதால், அக்கட்சிக்கு எதிராக அதிமுகவினர் விமர்சனங்களை முன்வைக்க தொடங்கிவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று (நவ., 07) பேட்டியளித்த அவர், 'இதுநாள் வரை மிகத்தீவிரமாக ஆதரித்து வந்த அதிமுகவினர் தற்போது நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். ஊடகங்களில் வரும் செய்தி தொடர்பாளர்களும் தவெகவை விமர்சிக்க தொடங்கிவிட்டனர்' என்று தெரிவித்தார்.