அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான “போர்வாள்” தமிழ் நாளிதழின் முன்னோட்டத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 20) தொடங்கி வைத்துள்ளார். அதிமுக இபிஎஸ் மற்றும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணி என பிரிந்துள்ள நிலையில், 'நமது அம்மா' நாளிதழை எஸ்.பி.வேலுமணி தரப்பு கைப்பற்றியது. இந்த நிலையில், அந்த நிறுவனத்தில் ஆசிரியர் பொறுப்பில் இருந்து கல்யாணசுந்தரம் ராஜினாமா செய்தார். இதனிடையே அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக நிறுவனர் இபிஎஸ் பெயரில் “போர்வாள்” அறிவிக்கப்பட்டுள்ளது.