அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கண்டிஷன்களுக்கு ஓகே சொல்லுபவர்களுக்கு மட்டுமே சீட்டு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கட்சிக்கு உண்மையான விசுவாசியாக இருக்க வேண்டும். தேர்தலுக்குப் பிறகு பாஜக ஏதேனும் வேலையைக் காட்டினால்கூட அதற்கு இடம் கொடுக்காதவராக இருக்க வேண்டும். களத்தில் நன்றாக உழைக்கக்கூடிய, திமுகவுக்குக் கடும் சவால் கொடுப்பவராகவும், பணத்தை செலவு செய்பவராகவும் இருக்க வேண்டும். முக்கியமாக ஜாதகம் சரியாக இருக்க வேண்டுமாம்.