தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேமுதிகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் மத்தியில் பேசியதாக கூறப்படுகிறது. அதே போல் மற்ற கூட்டணி கட்சிகளுடன் இணக்கமாக நடந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.