“அதிமுகவை வழிநடத்தும் திறன் எடப்பாடியிடம் இல்லை” என தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு தெரிவித்துள்ளார். மேலும் அவர் இன்று (பிப்.7) செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “எடப்பாடி பழனிசாயின் செயல்பாடுகள் சரியில்லை. கட்சியின் வளர்ச்சிக்கு சரியாக திட்டமிடவில்லை. அதிமுகவில் விருப்ப மனு வாங்கினேன். அதன் பின்னர் அந்த கட்சியைப் பிடிக்கவில்லை விலகிவிட்டேன். வரும் தேர்தலில் அதிமுக நிச்சயமாக வெற்றிப் பெறாது” என்றார்.