அதிமுக ஒன்றிணைய வேண்டும் என தற்கொலை செய்துக்கொண்ட அக்கட்சி நிர்வாகி மகேந்திரன் உடலுக்கு, இபிஎஸ் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மகேந்திரனின் மறைவு ஈடு செய்ய முடியாதது. கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இப்படிப்பட்ட செயல்களில் இனி ஈடுபட வேண்டாம் என பாதம் பணிந்து தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.