"ஜெயலலிதாவின் மகள்" என கூறியவரை விரட்டியடித்த அதிமுக தொண்டர்கள்

19பார்த்தது
"ஜெயலலிதாவின் மகள்" என கூறியவரை விரட்டியடித்த அதிமுக தொண்டர்கள்
மறைந்த அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என கூறி ஜெயலட்சுமி என்பவர், 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். நேற்று (ஜன.10) சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேர்காணலுக்காக வருகை தந்த அவரை அலுவலகத்திற்குள் அனுமதிக்க மறுத்து அதிமுக தொண்டர்கள், விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பொதுச்செயலாளர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலட்சுமி கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி