இந்திய விமானப்படையின் முன்னாள் அதிகாரி ஒருவரை பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கூறி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த குலேந்திர சர்மா என்ற இவர், பாகிஸ்தானின் உளவு நிறுவனங்களுக்கு விமானப்படை குறித்த முக்கியமான மற்றும் ரகசிய தகவல்களை வெளியிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானப்படை ரகசியங்களை தெரிவித்ததை கண்டறிந்ததை தொடர்ந்து இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார்.