டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு இன்று (ஜன.15) ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. நடுவானில் பறந்த நிலையில் ஈரான் வான் எல்லை மூடப்பட்டதால் விமானம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விமானம் மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக விமான நிலையத்தில் இருந்த கண்டெய்னர் மீது விமானம் மோதியது. இந்த சம்பவத்தில் விமானத்தின் என்ஜின் சேதமடைந்தது. இதையடுத்து அந்த விமானத்தின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.