டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் எனவும், கட்டுப்பாட்டை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்று மாசு அதிகரிப்பால், நகரின் பல பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற அளவுக்கு பதிவாகியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.