இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ் ஜெட் போன்ற விமான சேவைகளை நாடிய பயணிகளிடம், டெல்லி-சென்னை இடையே கடைசி நேர பயணத்திற்கு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. டெல்லியில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம் போன்ற நகரங்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.