நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் 400க்கும் மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்டு, 95 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போனவர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களும், 57 தமிழர்களும் அடங்குவர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், நேபாள உள்நாட்டு விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளன. இது பேரிடர் காலத்தில் லாபம் ஈட்டும் செயல் என சமூக ஊடகங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.