ஹெச்.ராஜாவை சந்தித்த ஏர்போர்ட் மூர்த்தி

0பார்த்தது
ஹெச்.ராஜாவை சந்தித்த ஏர்போர்ட் மூர்த்தி
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி இன்று (பிப்., 28) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னையில் உள்ள இல்லத்திற்கு சென்ற மூர்த்தி, ஹெச்.ராஜாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இந்த சந்திப்பின் போது அரசியல், ஆன்மீகம் என பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் உரையாடியுள்ளனர். முன்னதாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஹெச்.ராஜா அண்மையில் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி