நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (84) வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். தாயாரின் மறைவுச் செய்தி கேட்டு துபாயிலிருந்து சென்னை திரும்பிய அஜித், இன்று நடைபெற்ற இறுதிச்சடங்கில் பங்கேற்றார். ஈஞ்சம்பாக்கத்திலிருந்து பெசன்ட் நகர் மின்மயானம் வரை நடைபெற்ற இறுதி ஊர்வலத்தைத் தொடர்ந்து, தாயாரின் உடலை அவரே சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.