நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைவுக்கு
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான
மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அன்னையை இழந்து வாடும் அஜித்தை தேற்ற வார்த்தைகள் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரிலிருந்து அஜித் மீளத் துணைநிற்கட்டும் என்று கூறி, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.