காவல் துறையால் அஜித்குமார் துடிதுடிக்க கொலை செய்யப்பட்டுள்ளார் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். இளைஞர் அஜித் குமார் கொல்லப்பட்டதைக் கண்டித்து திருப்புவனம் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய பிரேமலதா, "இம்மண்ணில் நடந்த கொடுமையான நிகழ்வை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏழைகளுக்காக பேச யார் இருக்கிறார்கள் என்ற மமதையில் இருக்க கூடாது. தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.