நடிகர் அஜித்குமாரின் 64-வது திரைப்படத்திற்கு 'டேர்டெவில்' என பெயரிடப்பட்டுள்ளதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் X தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இன்றுடன் திரைத்துறையில் அஜித் 34 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் வகையில், படத்தின் பெயருடன் உள்ள போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்-ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி சேர்ந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.