பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 2026-27-ம் ஆண்டிற்கான புதிய கலால் கொள்கையின் கீழ், பெட்ரோல் பங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் உள்ளூர் சந்தைகளிலும் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.73 கோடிக்கும் மேல் ஜிஎஸ்டி வருவாய் ஈட்டும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் பெட்ரோல் பங்குகளுக்கு மட்டுமே இந்த மது விற்பனை உரிமங்கள் வழங்கப்பட உள்ளன. வணிக ரீதியான வருவாயை பெருக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.