"அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்".. CM விஜய்க்கு திருமாவளவன் கோரிக்கை

4188பார்த்தது
"அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்".. CM விஜய்க்கு திருமாவளவன் கோரிக்கை
"மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் காலம் தாழ்த்தாமல் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்" என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து மேகதாது விவகாரம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி