வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) உரிய கால அவகாசம் வழங்க வலியுறுத்தியும், பணி நெருக்கடியைக் கண்டித்தும் வருவாய்த் துறை ஊழியர்கள் இன்று (நவ.18) முதல் SIR பணிகளை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக, படிவங்கள் பெறுதல், இணையத்தில் பதிவேற்றம் செய்தல், SIR ஆய்வுக் கூட்டங்கள் என வாக்காளர் பட்டியல் தொடர்பான அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த புறக்கணிப்பிற்கு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பேற்றுள்ளது.