“தவெக பெரிய கட்சியாக இருக்கும் என்று நினைத்தேன். புதிதாக கட்சி தொடங்குவது பெரிய விஷயம் இல்லை அதை பற்றி நான் கவலைப்படுவது இல்லை” என மதுரையில் அமைச்சர் ராஜா கண்ணப்பன் விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “மதுரையில் மாநாடு நடைபெற்றது யார் யார் வருகிறார் என்று வண்டியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, நான்கு பேர் தான் பெரிய ஆட்களாக இருந்தார்கள், மற்றவர்கள் 15 வயது உள்ள ஆட்கள் அதிகமாக இருந்தார்கள்” என்றார்.