தவெகவின் மாநில நிர்வாகியான அருண்ராஜ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அக்கட்சி தலைவர் விஜய்யின் ஒப்புதல் இல்லாமல் இந்த பேச்சுவார்த்தையில் அருண்ராஜ் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த விஜய், அருண்ராஜை அழைத்து கடும் எச்சரிக்கை விடுத்ததாக பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும், கூட்டணி பற்றி தனிநபர் முடிவு எடுக்க கூடாது என்றும், கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்தாலோசித்தே முடிவு எடுக்க வேண்டும் என்றும் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.