எங்களது பலம் என்பது எங்கள் கூட்டணிதான் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தஞ்சையில் இன்று (நவ., 18) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பொது எதிரியை வீழ்த்தவே 10 ஆண்டுகளாக நாங்கள் அனைவரும் ஒரே கூட்டணியாக பயணித்து வருகிறோம். கூட்டணி கட்சிகள் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பொது எதிரியை வீழ்த்துவதே நோக்கம். கூட்டணி தொடர்பாக விஜய்யுடன் காங்கிரஸ் பேசியது தொடர்பாக அவர்களிடம்தான் கேட்க வேண்டும்' என்று தெரிவித்தார்.