சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராமதாஸ் தரப்பு பாமக இதுவரை கூட்டணியை அறிவிக்கவில்லை. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று (ஜன.11) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கூட்டணி குறித்து பேசி வருகிறோம். பாஜக தரப்பில் இதுவரை பேசவில்லை” என்றார். தொடர்ந்து, கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு திமுக அழைத்ததா? என்ற கேள்விக்கு, “திமுகவும் கூட்டணி குறித்து பேசவில்லை” என கூறிவிட்டுச் சென்றார்.