தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பது குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அக்கட்சியின் சட்டமன்ற தலைவர் செ.ராஜேஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார். தவெகவை ஆதரிப்பது பதவி ஆசைக்காகவோ அல்லது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமோ அல்ல என்றும், நாட்டின் மதச்சார்பின்மையை நிலைநாட்டவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.