இயக்குநர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்திற்கு 'ராக்கா' என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று (ஏப்.8) வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, இந்திய சினிமா ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம், ஒரு பிரம்மாண்ட படைப்பாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.