சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக, அமமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இன்று (நவ., 12) இணைத்துக் கொண்டனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் ஏராளமானோர் தங்களை திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.